இந்தியா அணி தொடரை வென்றது

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற 20-20 தொடரை இந்தியா அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தொடரின் முதற் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அணி மீதமிருந்த போட்டிகள் இரண்டையயும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிக்கொண்டது.

இன்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்தியா அணி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நல்ல ஆரம்பம் கிடைத்த போதும் ஐந்து விக்ட்களை தொடர்ச்சியான இடைவேளைகளில் அவுஸ்திரேலியா அணி இழந்து தடுமாறியது. இறுதி நேரத்தில் ரிம் டேவிட், டானியல் சாம்ஸ ஆகியோரது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் அவுஸ்திரேலியா அணி பலமான நிலைக்கு சென்றது. டேவிட் 54(27) ஓட்டங்களையும், சாம்ஸ் 28(20) ஓட்டங்களையும் பெற்றனர். அதிரடி ஆரம்பத்தை வழங்கிய கமரூன் க்ரீன் 52(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்த்ரா ஷெகல், ஹர்ஷெல் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியின் ஆரம்பம் சரியாக அமையவில்லை. இருப்பினும் விராத் கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக துடுப்பாடி இந்தியா அணியினை மீட்டனர். மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 104 ஓட்டங்களை பகிர்ந்தார்கள். கோலி 63(48) ஓட்டங்களையும், யாதவ் 69(36) ஓட்டங்களையும் பெற்றனர். ஹார்டிக் பாண்ட்யா ஆட்டமிழக்கமால் 25(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டானியல் சாம்ஸ் 2 விக்கெட்களையும், ஜோஸ் ஹெசல்வூட், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

போட்டியின் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடர் நாயகனாக அக்ஷர் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version