திலீபனின் இறுதி நாள் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக இன்றைய நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகிறது. தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அத்தோடு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய நிகழ்வுக்கு வர்த்தகர்கள் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் நின்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version