பொது மக்களது பாதுகாப்பை உறுதி செய்யவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தார் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பகுதிகளில் அமைதியான மக்கள் நடவடிக்கைகளுக்கு எந்த தடையுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைதியான போராட்டங்களுக்கு அனுமதியுண்டு எனவும், போராட்டங்கள் நடாத்தப்படுவதற்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னர் அந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெறபபடவேண்டும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அனுமதியின்றி போராட்டங்களை நடாத்த முடியாதெனவும் அவர் கூறியுளளார்.
சட்டத்துக்கு புறம்பாக மக்களுக்கு இடையூறு ஏற்படும் முகமாகவும், பொறுப்பற்ற ரீதியில் நடாத்தப்படும் எந்த போராட்டங்களும் அனுமதி இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டரீதியாக எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் அரசாங்கம் அனுமதிக்காது என்றும் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பான ரீதியில் நடவடிக்கை எடுக்குமெனவும், ஏற்கனவே நடைபெற்றது போன்று வன்முறைகள் ஏற்பட இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.
சட்டரீதியாக எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் அரசாங்கம் அனுமதிக்காது என்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.