ஸ்ரீடெலோ உதயராசா பிணையில் விடுதலை

காணி பிரச்சினை தொடர்பான வழக்கொன்றில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீடெலோ அமைப்பின் செயலாளர் உதயராசா நேற்று(26.09) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் அவரது வசிப்பிடம் தொடர்பில், அவரது உறவினர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்டுக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிண வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version