அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு இரத்து செய்ய வாய்ப்புள்ளதாக ஜனாதிபதியின் நெருக்கமனாவர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பை இரத்து செய்வது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் மூலம் வியாபார நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகுவதாக பொருளாதார நிபுணர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதன் காரணமாக இந்த அறிவிப்பு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் வெளியிடப்பட்ட வர்த்தமானி மாற்றம் செய்யப்படுமெனவும், கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்ய பிறிதொரு நடைமுறை அமுல்செய்யப்படும் எனவும் நம்பப்படுகிறது.