சவூதி அரேபியாவின் புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான்

சவூதி அரேபியவுக்கான புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை புதிய பிரதமராக நியமித்து சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சவுட் அரச ஆணையினை நேற்று(27.09) பிறப்பித்தார். அத்தோடு அமைச்சரவையினை மாற்றியமைக்குமாறும் அவர் கட்டளையிட்டுள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். மொஹமட் பின் சல்மான் உலகின் முதல் நிலை ஒயில் ஏற்றுமதியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 86 வயதான நாட்டின் அரசர் நாட்டின் தலைவராக தொடர்வார் எனவும், அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுவார் எனவும் சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசர் அண்மையில் நோயுற்று மருத்துவர சிகிச்சைகள் பெற்றதாகவும், படிப்படியாக தனது அதிகாரங்களை தனது வாரிசுகளுக்கு மாற்றம் செய்வதாகவும் மேலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமரான 37 வயதான இளவரசர் சல்மான் ஏற்கனவே அரசாட்சியின் பல முக்கிய பொறுப்புகளை தலைமையேற்று நடாத்துவதாகவும், பொருளதாரம் பாதுகாப்பு, ஒயில், உள்ளக பாதுகாப்பு போன்றவை இவரின் கீழயே காணப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசரின் இளைய சகோதரரான காலிட் பின் சல்மான் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசரின் 13 பிள்ளைகளில் இருவர் இறந்துள்ள நிலையில் மற்றையவர்களும் அரசாங்கத்திலும், அரச சார் பதவிகளிலும் முக்கிய பதவிகளை கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version