மாணவர்களை தாக்க அமைச்சு வாகனத்தை பாவித்த அமைச்சரது மகன்

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகனும் அவரது நண்பர்கள் நால்வர் இணைந்து மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சம்பவத்தில் காயமைடந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 20 வயதான இராஜாங்க அமைச்சரின் மகனது நண்பர் ஒருவரது காதலிக்கு தாக்குதலுக்குள்ளான மாணவர்களில் ஒருவர் கடிதம் கொடுத்ததாகவும் அதன் காரணமாகவே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த வாகனம் கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version