ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியல் சுனாமி ஒன்று அடிக்குமெனவும், ஊழல் அரசியல்வாதிகள் அதன் மூலம் துரத்தப்படுவார்கள் எனவும், இந்த சுனாமியில் தற்போதைய ஜனாதிபதியும் அகப்படுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவியுமான ஹிருனிகா பிரேமச்சந்திர இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த எச்சரிக்கையினை விடுத்துளளார்.
இந்த விடயத்தை கூறியமைக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால் தான் அழைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆனால் இந்த சம்பவம் இந்த மாத இறுதியில் கட்டாயம் நடைபெறுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எப்போது நடைபெறும் என அறிவித்துவிட்டு போராட்டங்களை நடாத்துவதில்லை என தெரிவித்துள்ள அவர், கடந்த போராட்டங்களின் போது பெண்கள் தலைமையேற்று நடாத்தியது போல இம்முறையும் நடாத்துவார்கள் எனவும், கடந்த முறை அதிகமாக நடுத்தர வர்க்கத்தினரே வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர் எனவும், இம்முறை கீழ்த்தட்டு வர்க்கத்தினர் போராட்டங்களில் களமிறங்குவார்கள் எனவும் ஹிருனிகா கூறியுள்ளார்.