உயர் பாதுக்காப்பு வலயத்தை இரத்து செய்தார் ஜனாதிபதி

கடந்த 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுல் செய்யப்பட்ட அதி உயர் பாதுக்காப்பு வலய பிரகடனம் இன்று(01.10) முதல் இரத்து செய்வதாக அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்துள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் பல்வேறுபட்டவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடணம் மூலம் வியாபாரம் பாதிப்பு ஏற்படுமெனவும், பொருளாதரத்தில் பாதிப்பு ஏற்படுமெனவும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவு மாற்றம் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

வெளியாகியுள்ள வர்த்தமானி கீழுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version