இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் திடீர் மரணம்

இலங்கை சினிமாவின் சிறந்த நடிகராக போற்றப்படும் தர்ஷன் தர்மராஜ் திடீர் மரணமடைந்துள்ளார். பல தேசிய விருதுகளை வென்ற நடிகர் இவர். தமிழ் நாடக துறை, சினிமா மட்டுமன்றி சிங்கள சினிமா துறையிலும் பெயர் பதித்து விருதுகளை வென்றவர் தர்ஷன். இவரின் இழப்பு சினிமா துறைக்கு பாரிய இழப்பு.

திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு(01.10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நம்முடைய தர்ஷன் தர்மராஜ் காலமானதாக அவர் தந்த தகவல் நம்பமுடியாமல் இருக்கிறது, பொய்யாக இருந்துவிடக் கூடாதா என மனம் ஏங்குகிறது. என் மகன்மாரில் ஒருவரை இழந்துவிட்டது போன்றதோர் உணர்வு” என இலங்கை நாடக மற்றும் சினிமா துறையின் மூத்த நடிகரான சந்திரசேகரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“2002ஆம் ஆண்டு சிட்னி சந்திரசேகரனின் “A-9” நாடகத்தொடர் மூலம் தன் கலைப்பயணத்தை “சிரச” தொலைக்காட்யின் மூலம் ஆரம்பித்த தர்ஷன் தர்மராஜ் 20 ஆண்டுகளுக்குள் தன் கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு நம்மை விட்டு விடை பெறுவது கொடுமையிலும் கொடுமை.

“இதுவரை காலமும் சிங்களத் திரைத்துறையில் எந்தவொரு தமிழ் கலைஞருக்கும் இல்லாத அபிமானத்தையும், மதிப்பு மரியாதையையும் பெற்றிருந்த நமது பெருமைக்குரியதொரு கலைஞன் தர்ஷன் தர்மராஜ். உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகள் பலவற்றை தனதாக்கிக்கொண்டு தன்னடக்கம் மிக்கவராயிருந்தவர்.

எத்தனை உச்ச்களைத் தொட்டபோதும் அன்று இருந்ததுபோல் இன்றும் அதே அடக்கத்துடன், பணிவுடன், மரியாதையுடன் பழகும் பண்புதான் தர்ஷன் இவ்வளவு உச்சங்களை தொட காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.” எனவும் சந்திரசேகரன் தர்ஷனின் இழப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் திடீர் மரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version