கோதுமை மாவின் விலையினை குறைப்பதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்துக்குள் விலை குறைக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இன்று(03.10) பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நளின் மேலும் கூறியுள்ளார். 100 கொள்கலன் கோதுமை மா வருகை தந்துள்ளதாகவும் இந்த வாரத்தில் அவை துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வரப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
டுபாய் மற்றும் துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவை வருகை தருவதற்கு தாமதமானதாலேயே கோதுமை மா விலை அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.