ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் சந்தித்ததாகவும், இருவரும் உணவு உண்டதாக பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S. M.மரிக்கார் முன்வைத்த கருத்தினை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
தான் காலை உணவினை சிங்கப்பூர் அதிகாரிகளுடன் உட்கொண்டதாகவும். மதிய போசனத்தை விமானத்தினுள் உட்கொண்டதாகவும், தேவையெனில் அதனை நிரூபிக்க முடியுமெனவும் ஜனாதிபதி பதிலளித்த அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என்ற ஹிருனிகாவின் பாதையில் செல்வதாக கூற மரிக்கார் அதனை மறுத்து தான் அவ்வாறே அவரின் பாதையில் செல்ல தேவையில்லை என கூற “அப்படியாயின் என்னோடு இணைந்து எனது பாதையில் பயணிப்பது நல்லது” என கூறினார்
அர்ஜுன மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.