கோதுமை மாவின் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை எனவும், கூடுவதற்கான வாய்ப்பே காணப்படுவதாக வெதுப்பாக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக மேம்படுத்தல் வரி 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் இரண்டு 13 ரூபாவினால் விலையினை அதிகரிக்கவுள்ளதாக அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது. அவ்வாறாயின் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் நளின் பண்டார கோதுமை மா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படுமெனவும் பாரளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் இறக்குமதியாளர்கள் மாவின் விலையினை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.