ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு புத்தளம் உயர் நீதிமன்றில் மூன்றாம் தடவை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆவணங்களை நீதிமன்றத்துக்கு எடுத்து வராமையினால் வழக்கு பிற்போடடப்பட்டது. அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு நடத்துனரான அரச தரப்பு வழக்கறிஞர் வழக்கினை பிற்போட கோரியபோது தொழிசார் முறைமையின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் பிறிதொரு வழக்கில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த வழக்கிற்கு சமூகமளிக்கவில்லை. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின்த இந்தாதாஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் முக்கிய சாட்சியினை குறுக்கு விசாரணை செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வழக்கு நடத்துனர் இல்லை.
சாட்சியங்கள் மூலம் வழக்கினை தொடர முடியாதென தெளிவாக தெரிவதாகவும், ஆனால் நன்றாக தெரிந்த காரணங்களுக்காக வழக்கு பின் செல்வதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நீதிமன்றத்துக்கு ஆஜரான அரச தரப்பு வழக்கறிஞர் தன்னிடம் வழக்கு பதிவுகள் இல்லையென தெரிவித்தனை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினரும் வழக்கின் ஆவணங்களை கொண்டுவராத நிலையில் வழக்கினை நடாத்த முடியவில்லை.
குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரது வாக்கு மூலங்களை பதிவு செய்த நீதிபதி, வழக்கினை 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததோடு, குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.