பாராளுமன்ற குழுவான பொது நிறுவன குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவை எதிர்த்து போட்டியிட்ட ரஞ்சித் பண்டார 14-7 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பதவியினை எதிர்கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.