இலங்கையில் அரசியல், கொள்கை மீளமைப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சமகால அரசாங்கம் பொருளாதார அரசியல் கொள்கைகளினையும் சட்டம் ஒழுங்கையும் உரிய முறையில் செயற்படுத்தி மக்களின் நம்பிக்கையினை வெல்ல வேண்டுமென பாரளுமன்ற உறுப்பினரும், அரசியல் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு பாராளுமன்ற தேசிய சபையின் உப குழு தலைவர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
நாம் அரசியல் மறுசீரைப்பு தொடர்பில் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.