நமுனுகுல தேயிலை உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 09 ஆம் திகதி 25 வயதான ஹர்ஷான் கணேசமூர்த்தி என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி இறந்தமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணித்துள்ளார்.
குறித்த இளைஞருக்கு மின்சார வேலைகள் தொடர்பில் அனுபவமில்லை எனவும், அவர் வேறு வேலைக்குரியவர் எனவும் கட்டாயப்படுத்தி மின் வேலைக்கு பணிக்கப்பட்ட நிலையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த இறப்புக்கான காரணம் மற்றும் அவர் குறித்த வேலைக்கு காட்டாயப்படுத்தப்பட்டாரா போன்ற விடயங்களை விசாரணை செய்யுமாறு அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கும், தொழில் திணைக்கள பணிப்பாளருக்கும் இந்த பணிப்பினை வழங்கியுள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் அவ்வாறு காட்டாயப்படுத்தி மின் வேலைக்கு பணிக்கப்பட்டிருந்தால் தொழிலாளர் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மேலும் பனித்துள்ளார்.