இராஜங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கான மனு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தினால் இன்று காலை இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீது பிடிவிறாந்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அவரது சட்ட தரணியான பய்ஷர் முஸ்தபா அவருக்கு அழைப்பாணை கிடைக்காமையினால் நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று மதியம் நீதிமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் சரத் நிசாந்த சரணடைந்தார். அவரை கடுமையாக எச்சரித்த நீதிபதி தினமும் நீதிமன்றத்தில் கையொப்பமிடவேண்டுமெனவும், தவறின் இறுக்கமான பிணை நிபந்தனை விதிக்கப்படுமெனவும் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று தொடர்பில் அவமதிக்கும் விதமாக சனத் நிஷாந்த கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழ்க்கு தொடரப்பட்டுள்ளது.