மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் இன்று (17.10) 20-20 உலகக்கிண்ண இரண்டாம் நாளில் இலங்கை போலவே மேற்கிந்திய தீவுகள் அணி படு தோல்வியடைந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இலங்கை அணி போலவே சிக்கல் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோர்ஜ் மன்சி ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அல்சாரி ஜோசெப், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேசன் ஹோல்டர் 38 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மார்க் வட் 3 விக்கெட்களையும், பிரட் வீல், மிச்சல் லீஸ்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், ஜோஷ் டேவி, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ஸ்கொட்லாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக ஜோர்ஜ் மன்சி தெரிவு செய்யப்பட்டார்.
நாளை (18.10) காலை 09:30 இற்கு நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் 20-20 உலகக்கிண்ண மூன்றாம் நாளின் முதற் போட்டியாக கீலோங்கில் முதற் போட்டியாக நடைபெறவுள்ளது. மதியம் 01:30 இற்கு இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கிடையில் இரண்டாவது போட்டியாக கீலோங்கில் நடைபெறவுள்ளது.