அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (23.10) ஹோபார்ட்டில் முதற் போட்டியாக நடைபெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சு துடுப்பாட்டம் ஆக்கியவன இலங்கை அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டும் சிறப்பாக அமைந்தது.
அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க உபாதை அடைந்ததனால் தனஞ்சய டி சில்வா குசல் மென்டிஸ் ஓடு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகியோர் 63 ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்த போது சரித் அசலங்க சிறப்பாக துடுப்பாடினார். குசல் மென்டிஸ், சரித் அசலங்க ஆகியோர் ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டு போட்டியினையும் நிறைவு செய்தனர்.