உலகக்கிண்ணத்தின் வாய்ப்புகள்…இலங்கையின் தலைவிதி நாளை?குழு 02 இல் நான்கு அணிக்குள் மோதல்!
ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தமக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையில் விளையாடிய பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் தமது வாய்ப்பை தக்கவைத்துள்ள அதேவேளை, தென்னாபிரிக்கா அணி தெரிவாகும் வாய்ப்பையும் தடுத்து வைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ளது. தென்னாபிரிக்கா, நெதர்லாந்துடனும், இந்தியா சிம்பாவேயுடனும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளன. அந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இரு அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெறவுள்ள. குழு 02 இந்த சகல அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்தியா 06 புள்ளிகளையும், தென்னாபிரிக்கா 05 புள்ளிகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் 04 புள்ளிகளையும், சிம்பாவே 03 புள்ளிகளையும், நெதர்லாந்து 02 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்கள் அடுத்ததடுத்து வீழ்ந்தன. நான்கு விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் கதை முடிந்தது என்ற நிலையில் மத்தியவரிசை வீரர்கள் அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.
இப்திகார் அஹமட் மற்றும் ஷதாப் கானின் அரைச்சதங்கள் மூலம் பாகிஸ்தான் அணி 185 என்ற வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பாக அன்றிச் நோக்யா 04 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்ப இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இணைப்பாட்டம் ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் மீண்டும் அடுத்தடுத்து இரு விக்கெட்கள் வீழ்த்தப்பட தென்னாபிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் 9 ஓவர்கள் நிறைவில் மழை பெய்தது. போட்டி இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட 142 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாபிரிக்கா அணி 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்கா அணி T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியுடனான நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரெம்பா பவுமா | பிடி – மொஹமட் ரிஸ்வான் | ஷதாப் கான் | 36 | 19 | 4 | 1 |
குயின்டன் டி கொக் | பிடி – மொஹமட் ஹரிஸ் | ஷயின் ஷா அப்ரிடி | 00 | 05 | 0 | 0 |
ரிலி ரொஸவ் | பிடி – நசீம் ஷா | ஷயின் ஷா அப்ரிடி | 07 | 06 | 0 | 1 |
எய்டன் மார்க்ராம் | BOWELD | ஷதாப் கான் | 20 | 14 | 4 | 0 |
ஹென்றிச் க்ளாஸென் | பிடி – மொஹமட் வசீம் | ஷயின் ஷா அப்ரிடி | 15 | 09 | 3 | 0 |
ரிஸ்டன் ஸ்டப்ஸ் | பிடி – முஹமட் நவாஸ் | நசீம் ஷா | 18 | 18 | 0 | 1 |
வெய்ன் பார்னல் | L.B.W | மொஹமட் வசீம் | 03 | 04 | 0 | 0 |
ககிஷோ ரபாடா | Run Out | 01 | 02 | 0 | 0 | |
அன்றிச் நோக்யா | பிடி – மொஹமட் ஹரிஸ் | ஹரிஸ் ரௌப் | 01 | 05 | 0 | 0 |
லுங்கி ங்டி | 04 | 01 | 1 | 0 | ||
ரப்ரைஸ் ஷம்ஸி | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 02 | |||||
ஓவர் 14 | விக்கெட் 09 | மொத்தம் | 108 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 03 | 00 | 14 | 03 |
நசீம் ஷா | 03 | 00 | 19 | 01 |
ஹரிஸ் ரௌப் | 03 | 00 | 44 | 01 |
மொஹமட் வசீம் | 02 | 00 | 13 | 01 |
ஷதாப் கான் | 02 | 00 | 16 | 02 |
முஹமட் நவாஸ் | 01 | 00 | 02 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரெம்பா பவுமா | பிடி – மொஹமட் ரிஸ்வான் | ஷதாப் கான் | 36 | 19 | 4 | 1 |
குயின்டன் டி கொக் | பிடி – மொஹமட் ஹரிஸ் | ஷயின் ஷா அப்ரிடி | 00 | 05 | 0 | 0 |
ரிலி ரொஸவ் | பிடி – நசீம் ஷா | ஷயின் ஷா அப்ரிடி | 07 | 06 | 0 | 1 |
எய்டன் மார்க்ராம் | BOWELD | ஷதாப் கான் | 20 | 14 | 4 | 0 |
ஹென்றிச் க்ளாஸென் | பிடி – மொஹமட் வசீம் | ஷயின் ஷா அப்ரிடி | 15 | 09 | 3 | 0 |
ரிஸ்டன் ஸ்டப்ஸ் | 02 | 06 | 0 | 0 | ||
உதிரிகள் | 02 | |||||
ஓவர் 9 | விக்கெட் 04 | மொத்தம் | 69 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 02 | 00 | 02 | 02 |
நசீம் ஷா | 02 | 00 | 17 | 00 |
ஹரிஸ் ரௌப் | 02 | 00 | 37 | 00 |
மொஹமட் வசீம் | 01 | 00 | 09 | 00 |
ஷதாப் கான் | 01 | 00 | 02 | 02 |
முஹமட் நவாஸ் | 01 | 00 | 02 | 00 |