பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு தொடர்கிறது.

உலகக்கிண்ணத்தின் வாய்ப்புகள்…இலங்கையின் தலைவிதி நாளை?குழு 02 இல் நான்கு அணிக்குள் மோதல்!

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தமக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.

இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையில் விளையாடிய பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் தமது வாய்ப்பை தக்கவைத்துள்ள அதேவேளை, தென்னாபிரிக்கா அணி தெரிவாகும் வாய்ப்பையும் தடுத்து வைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ளது. தென்னாபிரிக்கா, நெதர்லாந்துடனும், இந்தியா சிம்பாவேயுடனும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளன. அந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இரு அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெறவுள்ள. குழு 02 இந்த சகல அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இந்தியா 06 புள்ளிகளையும், தென்னாபிரிக்கா 05 புள்ளிகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் 04 புள்ளிகளையும், சிம்பாவே 03 புள்ளிகளையும், நெதர்லாந்து 02 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்கள் அடுத்ததடுத்து வீழ்ந்தன. நான்கு விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் கதை முடிந்தது என்ற நிலையில் மத்தியவரிசை வீரர்கள் அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.

இப்திகார் அஹமட் மற்றும் ஷதாப் கானின் அரைச்சதங்கள் மூலம் பாகிஸ்தான் அணி 185 என்ற வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பாக அன்றிச் நோக்யா 04 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்ப இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இணைப்பாட்டம் ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் மீண்டும் அடுத்தடுத்து இரு விக்கெட்கள் வீழ்த்தப்பட தென்னாபிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் 9 ஓவர்கள் நிறைவில் மழை பெய்தது. போட்டி இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட 142 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்கா அணி 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்கா அணி T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியுடனான நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரெம்பா பவுமாபிடி – மொஹமட் ரிஸ்வான்  ஷதாப் கான்361941
குயின்டன் டி கொக்பிடி – மொஹமட் ஹரிஸ்ஷயின் ஷா அப்ரிடி000500
ரிலி ரொஸவ்பிடி – நசீம் ஷா ஷயின் ஷா அப்ரிடி070601
எய்டன் மார்க்ராம்BOWELDஷதாப் கான்201440
ஹென்றிச் க்ளாஸென்பிடி – மொஹமட் வசீம்ஷயின் ஷா அப்ரிடி150930
ரிஸ்டன் ஸ்டப்ஸ்பிடி – முஹமட் நவாஸ்நசீம் ஷா181801
வெய்ன் பார்னல்L.B.Wமொஹமட் வசீம்030400
ககிஷோ ரபாடாRun Out 010200
அன்றிச் நோக்யாபிடி – மொஹமட் ஹரிஸ்ஹரிஸ் ரௌப்010500
லுங்கி ங்டி   04 01 0
ரப்ரைஸ் ஷம்ஸி    01 01 0 0
உதிரிகள்  02   
ஓவர்  14விக்கெட்  09மொத்தம்108   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷயின் ஷா அப்ரிடி03001403
நசீம் ஷா03001901
ஹரிஸ் ரௌப்03004401
மொஹமட் வசீம்02001301
ஷதாப் கான்02001602
முஹமட் நவாஸ்01000200
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரெம்பா பவுமாபிடி – மொஹமட் ரிஸ்வான்  ஷதாப் கான்361941
குயின்டன் டி கொக்பிடி – மொஹமட் ஹரிஸ்ஷயின் ஷா அப்ரிடி000500
ரிலி ரொஸவ்பிடி – நசீம் ஷா ஷயின் ஷா அப்ரிடி070601
எய்டன் மார்க்ராம்BOWELDஷதாப் கான்201440
ஹென்றிச் க்ளாஸென்பிடி – மொஹமட் வசீம்ஷயின் ஷா அப்ரிடி150930
ரிஸ்டன் ஸ்டப்ஸ்  020600
       
       
       
       
       
உதிரிகள்  02   
ஓவர்  9விக்கெட்  04மொத்தம்69   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷயின் ஷா அப்ரிடி02000202
நசீம் ஷா02001700
ஹரிஸ் ரௌப்02003700
மொஹமட் வசீம்01000900
ஷதாப் கான்01000202
முஹமட் நவாஸ்01000200

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version