இலங்கையில் குரங்கமம்மை நோய் தொற்றுக்குள்ளானவர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து வருகை தந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. நவம்பர் 01 ஆம் திகதி இந்த தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார்.
குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, போன்றவை காணப்படும். உடலில் சிறு பொக்களங்கள் உருவாகும். பிறப்புறுப்பு பகுதிகளில் தேமல் போன்றன ஏற்படும். கை, கால், வாய் நெஞ்சு பகுதிகளில் இவ்வாறான தேமல் அல்லது பொக்களங்கள் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டு இவ்வாறு பொக்களங்கள் ஏற்படும். சிலருக்கு பொக்களங்கள் வந்து அதன் பின்னர் காய்ச்சல் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிலருக்கு பொக்களங்கள் மாத்திரமே உருவாகும், இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதே நோயினை தீர்ப்பதற்கான வழி.