இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வலுவான ஓட்ட எண்ணிக்கை

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி தற்சமயம் அவுஸ்திரேலியா, அடிலயட்டில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்த இந்தியா அணி பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றை நோக்கி நகர முடியவில்லை. விராத் கோலி நிதானமாக துடுப்பாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். கோலி, பாண்ட்யாவின் இணைப்பாட்டம் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை ஓரளவு உயர்த்தி கொடுத்தது. ஹர்டிக் பாண்ட்யா இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

இந்தப் போட்டிக்காக அழைக்கப்பட்ட க்றிஸ் ஜோர்டான் 03 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த ஓட்ட எண்ணிக்கையினை இங்கிலாந்து பெறுவது கடினம் என்றே நம்பப்படுகிறது. நீண்ட துடுப்பாட்ட துடுப்பாட்ட வரிசையினை எனப்தனால் வாய்ப்புகளுள்ளன. இந்தியாவின் பந்துவீச்சு இறுக்கமாக அமைந்தால் இங்கிலாந்து அணியினை கட்டுப்படுத்த முடியும்.

அணி விபரம்

இந்தியா

ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராஹுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட், அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து

ஜோஷ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹரி ப்ரூக், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், அடில் ரஷீத், பில் சோல்ட், க்றிஸ் ஜோர்டான்

இன்று வெற்றி பெறுமணி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லோகேஷ் ராஹுல்பிடி – ஜோஷ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்050510
ரோஹித் ஷர்மாபிடி – சாம் கரண்க்றிஸ் ஜோர்டான்272840
விராட் கோலிபிடி – அடில் ரஷீத்க்றிஸ் ஜோர்டான்504041
சூரியகுமார் யாதவ்பிடி – பில் சோல்ட்அடில் ரஷீத்141011
ஹார்டிக் பாண்ட்யா Hit Wicket க்றிஸ் ஜோர்டான்633235
ரிஷாப் பான்ட்Run out 060310
ரவிச்சந்திரன் அஷ்வின்  000000
அக்ஷர் படேல்      
       
       
       
உதிரிகள்  13   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்168   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பென் ஸ்டோக்ஸ்02001800
கிறிஸ் வோக்ஸ்03002401
சாம் கரண்04004200
அடில் ரஷீத்04002001
லியாம் லிவிங்ஸ்டன்03002100
க்றிஸ் ஜோர்டான்04004303

ஜோஷ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹரி ப்ரூக், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், அடில் ரஷீத், க்றிஸ் ஜோர்டான்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version