ICC T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (13.11) மெல்பர்னில் நடைபெறுகிறது. 1992 ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச உலகக்கிண்ண இறுதிப்போட்டி இதே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்று பாகிஸ்தான் அணி மகுடம் சூடியது. பாகிஸ்தான் அணிக்கு இதோடு மூன்றாம் தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகி 1 தடவை 2009 ஆம் ஆண்டு மகுடம் சூடியது. இங்கிலாந்து அணிக்கும் இதோடு மூன்றாம் தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகி 1 தடவை 2010 ஆம் ஆண்டு மகுடம் சூடியது. இம்முறை சம்பியனாக எந்த அணி மகுடம் சூடுகிறதோ அந்த அணி இரண்டாம் தடவையாக மகுடம் சூடும். .
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அணி விபரங்கள்
பாகிஸ்தான் அணி விபரம் :- முஹமட் ரிஷ்வான் (வி.கா), பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ஹரிஸ், ஷான் மசூத், இப்திகர் அஹ்மத், மொஹமட் நவாஸ், ஷதாப் கான், மொஹமட் வசிம், நசீம் ஷா, ஹரிஸ் ரவுப், ஷஹீன் ஷா அப்ரிடி
இங்கிலாந்து அணி விபரம் :- ஜோஷ் பட்லர் (வி.கா) (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், பில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ஹரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷீத்