கட்டாரில் நடைபெற்று வரும் காற்பந்து உலக கிண்ண தொடரின் அமெரிக்க, வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என சமநிலையில் நிறைவுற்றது.
அமெரிக்கா அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. முதற் பாதியில் வேல்ஸ் அணி பல பிழைகளை விட்டது. இருந்தாலும் இரண்டாவது போட்டியில் கடுமையாக போராடி மீள்வருகை ஒன்றை மேற்கொண்டது. வேல்ஸ் கோல் காப்பாளரின் சிறப்பான செயற்பாட்டினால் போட்டி ஆரம்பித்த சொற்ப வேளையிலேயே அமெரிக்காவின் அடுத்தடுத்த இரண்டு கோல் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன.
அமெரிக்கா அணி 36 ஆவது நிமிடத்தில் கோலை பெற்றுக்கொண்டது. திமோதி வியா அந்த கோலை பெற்றுக்கொண்டார். இவர் முன்னாள் லிபியா தேசிய வீரரும் அந்த நாட்டின் தலைவருமான ஜோர்ஜ் வியாவின் மகனாவார்.
கடுமையாக போராடிய வேல்ஸ் அணியின் தலைவரை வீழ்த்தியமையையால் கிடைத்த பனால்டி உதையினை தலைவர் கரித் பலே கோலாக மாற்றி போட்டியினை சமநிலைக்கு மாற்றினார்.
போட்டி 1-1 என்ற சமநிலையில் நிறைவடைந்தது.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | இங்கிலாந்து | 01 | 01 | 00 | 00 | 03 | 04 | 06 | 02 |
| 2 | வேல்ஸ் | 01 | 00 | 00 | 01 | 01 | 00 | 01 | 01 |
| 3 | அமெரிக்கா | 01 | 00 | 00 | 01 | 01 | 00 | 01 | 01 |
| 4 | ஈரான் | 01 | 00 | 01 | 00 | 00 | -04 | 02 | 06 |