ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் கல்வி நிலைய பிரதி தலைவராக ஜனகன் நியமனம்

கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாமானிய டி எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று(21.11) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியினை வழங்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் மாமானிய டி எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் செயற்படும் என கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நாடுபூராகவும் விஷ்தரிக்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

காலாநிதி ஜனகன் இரண்டு தசாப்தகாலங்களுக்கு மேலான கல்வித்துறையின் பங்களிப்பும் கல்வித்துறையில் கொண்டுள்ள அனுபவமும் இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்க மிக உறுதுணையாக இருக்கும் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமான்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக்க பத்திரன “இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக online மூலமும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த கல்விநிறுவனத்தின் செயற்பாடுகள் கலாநிதி ஜனகனின் வழிநடத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version