சாமிக்க கருணாரட்னவுக்கு ஒத்திவைக்கப்பட்ட தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சாமிக்க கருணாரட்னவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட சகல போட்டிகளுக்குமான ஒரு வருட தடையும், 5000 அமெரிக்க டொலர்கள் தண்டமாகவும் அறவிடப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமிக்க கருணாரட்ன அவுஸ்திரேலியாவில் ஒப்பந்த விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக மூவர் அடங்கிய விசாரணை குழு விசாரணைகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவுக்கு அறிவித்துள்ளது. வீரருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்குமாறும், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் அவருக்கு தண்டனை வழங்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலக கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரரான சாமிக்க கருணாரட்ன அணி விதிமுறைகளை மீறி சூதாட்ட நிலையத்துக்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Social Share

Leave a Reply