கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் ஜேர்மனி அணி ஜப்பான் அணியிடம் அதிர்ச்சி தோல்வி ஒன்றினை சந்தித்துள்ளது. ஜப்பான், ஜேர்மனி அணிகள் இம்முறையே முதற் தடவையாக உலக கிண்ண தொடரில் சந்தித்துள்ளன.
ஜப்பான் அணி 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இது ஜப்பான் அணியின் ஆறாவது உலக கிண்ண வெற்றியாகும். பலமான முன்னணி அணி ஒன்றை ஜப்பான் உலக கிண்ண தொடரில் வெற்றி பெறுவது இதுவே முதற் தடவையாகும்.
போட்டி ஆரம்பித்து 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணிக்கு கிடைத்த பனால்டியினை கோலாக மாற்றினார் கே குவன்டகன். அதன் பின்னர் போட்டி கடுமையாக சென்றது. 75 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்ஸு டோவான் சிறப்பான கோல் ஒன்றின் மூலம் போட்டியினை சமநிலை செய்தார். 8 நிமிட இடைவெளியில் அடுத்த வெற்றி கோலை ரகுமா அஷானோ அடித்தார். ஜேர்மனி அணி இறுதி வரை கோல்களை பெற எத்தனித்த போதும் முடியாமல் போனது.
ஜப்பானின் கோல் காப்பாளர் சுச்சி கொண்டா ஜேர்மனி அணி கோல்களை அடிக்க முடியாமல் போனமைக்கு முக்கியமான காரணமாகும். ஒரு தடவை அடுத்தடுத்து ஐந்து தடவைகள் கோல்களை நோக்கி அடிக்க அவற்றை தொடர்ந்தும் தடுத்தார்.