உருகுவே அணிக்கு சவால் வழங்கிய தென் கொரியா

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இன்றைய (24.11) இரண்டாம் போட்டியில் உருகுவே, தென்கொரியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல்களின்றி போட்டியினை நிறைவு செய்தன.

தென் அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த பலமான உருகுவே அணிக்கு தென்கொரியா அணி பலமான சவாலை வழங்கியது. உருகுவே அணி கோல்களை பெற முயன்ற போதும் தென்கொரியா அணி அவற்றை தடுத்தது.

இதுவரையில் மூன்று தடவைகள் இரு அணிகளும் சந்தித்துள்ள நிலையில் முதல் இரு போட்டிகளிலும் தென் கொரியா தோல்வியினை சந்தித்துள்ளது. இவ்வாறான நிலையில் உருகுவே அணி இந்தப் போட்டியினை சமன் செய்தது அவர்களின் திறமையாகவே கணிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version