ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா இணை இணைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா இணை இணைப்பாளராக சாந்திகுமார் நிரோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான ஆவணம் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டுள்ளது.

சாந்திகுமார் நிரோஷ் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் இணைப்பு செயலாளராக கடமையாற்றியவர். கடந்த சில வருடங்களாக வவுனியாவில் பல நிகழ்வுகளில் நாமல் ராஜபக்ஷ்வின் பிரதிநிதியாக கலநது கொண்டிருந்த்தார்.

தற்போது பலரும் கட்சி மாறிவரும் நிலையில், இவர் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளார்.

இவருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில், முல்லைத்தீவு இணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவருமான லக்சயன் முத்துகுமாரசுவாமியும் கலந்து கொண்டிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version