கட்டாரில் நடைபெற்று வரும் FIFA உலக கிண்ண தொடரின் குழு A இலிருந்து இரண்டாம் சுற்றுக்கு நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் தெரிவாகியுள்ளன.
நெதர்லாந்து, கட்டார் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி இலகுவான 2-0 எனும் வெற்றியினை பெற்று அடுத்து சுற்றுக்கு தெரிவானது. நெதர்லாந்து அணி சார்பாக முதலாவது கோலை கோடி கக்போ 26 நிமிடத்தில் பெற்றுக் கொண்டார். இரண்டாவது கோல் பிராங்கி டி ஜோங்கினால் 49 ஆவதி
நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
போட்டிகளை நடாத்தும் கட்டார் நாடு மூன்று போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து வெளியேறியுள்ளது.
செனகல் மற்றும் எகுவாடர் அணிகளுக்கிடையிலான போட்டி இறுதிவரை விறு விறுப்பாக சென்றது. 44 ஆவது நிமிடத்தில் பனால்டி மூலமாக இஸ்மைலா சார் கோலடித்து செனகல் அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். 67 ஆவது நிமிடத்தில் மொய்சஸ் கசிடோ சமநிலை கோலை அடித்தார். அந்த கோல் அடிக்கப்பட்டு 3 நிடங்களில் கலிடோ கோலிபாலி வெற்றி கோலை அடித்தார்.
செனகல் அணி இரணடாவது தடவையாக முன்னோடி காலிறுதிக்கு தெரிவாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டு காலிறுதி வரை முதல் உலக கிண்ண தொடரில் முன்னேறியது செனகல் அணி. கடந்த முறை முதல் சுற்றோடு வெளியேறியது. இது அவர்களின் மூன்றாவது உலக கிண்ண தொடராகும்.
குழு A இல் முதலிடத்தை பெற்றுள்ள நெதர்லாந்து அணி குழு B இன் இரண்டாமிட அணியோடும், குழு A இல் இரண்டாமிடத்தை பெற்றுள்ள நெதர்லாந்து அணி குழு B இன் முதலிட அணியோடும் மோதவுள்ளன.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | நெதர்லாந்து | 03 | 2 | 00 | 01 | 07 | 04 | 05 | 01 |
| 2 | செனகல் | 03 | 02 | 00 | 0 | 06 | 03 | 05 | 02 |
| 3 | எகுவாடர் | 03 | 01 | 02 | 00 | 03 | -01 | 01 | 05 |
| 4 | கட்டார் | 03 | 00 | 03 | 00 | 00 | -06 | 01 | 07 |