இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் இரண்டாம் சுற்றில்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றுக்கு குழு B இலிருந்து தெரிவாகியுள்ளன.

இங்கிலாந்து அணி முதலிடத்தை பெற்ற அதேவேளை அமெரிக்கா அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா அணி கடந்த முறை உலக கிண்ண தொடருக்கு தெரிவாகியிருக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் உலக கிண்ணத்துக்கு வந்த அமெரிக்கா நேரடியாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது. போட்டி ஆர்மபித்தது முதல் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3 கோல்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி இந்த கோல்கள் மூலமாக உலக கிண்ண தொடரில் 100 கோல்களை பூர்த்தி செய்துள்ளது. வேல்ஸ் அணி ஏற்கனவே இரண்டு சமநிலை முடிவுகளை பெற்றிருந்த நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்து நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது. 64 வருடங்களுக்கு பின்னர் இரண்டாம் தடவையாக தெரிவு செய்யப்பட்ட வேல்ஸ் அணி இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக மார்கஸ் ரஷ்போர்ட் 50 மற்றும் 68 ஆம் நிமிடத்தில் கோல்களை பெற்றுக்கொண்டனர். பில் போடென் 52 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி மிகுந்த விறு விறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலையில் இரு அணிகளும் கடுமையாக போராடின. கிறிஸ்டியன் புலிசிக் 38 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக அமெரிக்கா அணி முன்னிலை. ஈரான் அணி கோல்களை போட முயற்சித்த போதும் அது சாதகமாகவில்லை. ஈரான் அணி உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியதில்லை. அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் கனவு நனவாகாமல் போனது.

நடைபெற்ற முடிவடைந்த குழு A மற்றும் குழு B போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, செனகல் அணிகளுக்கிடையில் முன்னோடி காலிறுதி போட்டிகள் என அழைக்கப்படும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 அணிபோட்டிவெற்றிதோல்விசமநிலைபுள்ளிகோ வித்அடி.கோ    பெ.கோ
1இங்கிலாந்து0302000107 070902
2அமெரிக்கா0302000106-010506
3ஈரான்0301000003-030407
4வேல்ஸ்0300010202-050601
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version