இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (30.11) கண்டியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. வெற்றி பெறுவதற்கு கடினமான போட்டியில் மிகவும் சிறப்பாக போராடி இலங்கை அணி வெற்றி பெற்றுக் கொண்டது. 314 ஓட்டங்களை துரத்தியடித்து இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் சரித் அசலங்க, டுனித் வெல்லாலகே ஆகியோரது 65 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
3 போட்டிகள் அடங்கிய தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளனர். ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இலங்கை அணியின் ஆரம்ப இணைப்பாட்டம் 101 ஓட்டங்களை வழங்கியது. இதன் மூலமாகவே இந்த இலக்கை துரத்தியடிக்க முடிந்தது. மத்திய வரிசை வீரர்கள் போதியளவு சிறப்பாக பிரகாசிக்கவில்லை. ஆனால் சராசரியாக துடுப்பாடினார்கள். அதுவும் கூட இந்த இலக்கை நோக்கி நகர உதவியது.
ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பாக இறுக்கமாக பந்து வீசிய போதும், இறுதி ஓவர்களில் ஓட்டங்களை வழங்க இலங்கை பக்கமாக வெற்றி மாறியது. சரித் அசலங்க அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால் டுனித் வெல்லாலகே புதியவர். வயது குறைந்தவர். அவரது அதிரடி துடுப்பாட்டமே இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் இப்ராஹீம் சட்ரன், நஜிபுல்லா சட்ரன் ஆகியோர் நிதானமாகவும், அதிரடியாகவும் துடுப்பாடி ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்கள். இருவரும் இப்ராஹீம் சட்ரன் அவரின் மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அவர் 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவரோடு இணைப்பாட்டம் புரிந்த நஜிபுல்லா சட்ரன் 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் சகல பந்து வீச்சாளர்களும் ஓட்டங்களை வழங்கினார்கள். அதில் கசுன் ரஜித்த 3 விக்கெட்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. இந்த ஓட்ட எண்ணிக்கை துரத்தியடிக்க கடினமானது. இந்த மைதானத்தில் பெறப்படவில்லை. அதனை மாற்றி செய்து காட்டியது இலங்கை.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | Bowled | ரஷீத் கான் | 35 | 55 | 3 | 0 |
குசல் மென்டிஸ் | பிடி – ரஷீத் கான் | மொஹமட் நபி | 67 | 61 | 8 | 1 |
டினேஷ் சந்திமால் | Bowled | மொஹமட் நபி | 33 | 32 | 2 | 1 |
தனஞ்சய டி சில்வா | Bowled | ரஷீத் கான் | 05 | 11 | 1 | 0 |
சரித் அசலங்க | 83 | 72 | 5 | 4 | ||
தஸூன் ஷானக | Boweld | ரஷீத் கான் | 43 | 44 | 5 | 0 |
வனிந்து ஹசரங்க | பிடி – ரஹ்மனுள்ளா குர்பாஸ் | ரஷீத் கான் | 02 | 03 | 0 | 0 |
டுனித் வெல்லாலகே | 31 | 21 | 4 | 1 | ||
உதிரிகள் | 15 | |||||
ஓவர் 49.4 | விக்கெட் 06 | மொத்தம் | 314 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பசல்ஹக் பரூகி | 9.4 | 00 | 70 | 00 |
முஜீப் உர் ரஹ்மான் | 10 | 00 | 70 | 00 |
குலாப்டின் நைப் | 06 | 00 | 48 | 00 |
மொஹமட் நபி | 10 | 00 | 56 | 02 |
ரஷீத் கான் | 10 | 00 | 37 | 04 |
நூர் அஹமட் | 04 | 00 | 32 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரஹ்மனுள்ளா குர்பாஸ் | Boweld | கசுன் ரஜித | 05 | 12 | 1 | 0 |
இப்ரஹிம் சட்ரன் | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | அசித்த பெர்னாண்டோ | 162 | 138 | 15 | 4 |
ரஹ்மத் ஷா | பிடி – குசல் மென்டிஸ் | கசுன் ரஜித | 22 | 30 | 4 | 0 |
ஹஸ்மதுல்லா ஷஹதி | L.B.W | தனஞ்சய டி சில்வா | 42 | 25 | 5 | 1 |
நஜிபுல்லா சட்ரன் | பிடி – தஸூன் ஷானக | வனிந்து ஹசரங்க | 77 | 76 | 8 | 1 |
மொஹமட் நபி | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | வனிந்து ஹசரங்க | 12 | 12 | 2 | 0 |
குல்படின் நைப் | Run Out | 08 | 11 | 0 | 0 | |
ரஷீத் கான் | பிடி – டினேஷ் சந்திமால் | கசுன் ரஜித | 13 | 10 | 1 | 0 |
நூர் அஹ்மத் | 02 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 313 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
கசுன் ரஜித | 10 | 00 | 60 | 03 |
மஹீஷ் தீக்ஷன | 07 | 00 | 46 | 00 |
டுனித் வெல்லாலகே | 04 | 00 | 25 | 00 |
அசித்த பெர்னாண்டோ | 10 | 01 | 64 | 01 |
தனஞ்சய டி சில்வா | 08 | 00 | 42 | 01 |
வனிந்து ஹசரங்க | 10 | 00 | 67 | 02 |
தஸூன் ஷானக | 01 | 00 | 05 | 00 |