இலங்கையில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த 24 மணி நேரமும் மதுபான நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் திறக்கப்படவேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாரளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடைமுறைப்படுத்தினாலேயே சுற்றுலாத்துறை மூலம் வருமானத்தை மேம்படுத்த முடியுமென அவர் கூறியுள்ளார். 10.30 இற்கு வியாபார நிலையங்கள், உணவு நிலையங்கள் மூடப்பட்டால் வருமானத்தை ஈட்ட முடியாது. சுற்றுலா பயணிகள் செலவழிக்க வழி செய்ய வேண்டுமென அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும், நேரடியாக வன விலங்கு பூங்காக்களும் மற்றைய விருப்பமான இடங்களுக்கும் அவர்கள் செல்லக் கூடிய வகையில் திட்டமொன்றை, நீண்ட நாட்கள் எடுக்காமல் உடனடியாக அமுல் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.