கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் குழு H இலிருந்து போர்த்துக்கல் மற்றும் தென் கொரியா அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. பலமான உருகுவே அணி இந்த குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதும், தென் கொரியா அணி அதனை தகர்த்து தாம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
போர்த்துக்கல் அணி சிறப்பாக விளையாடிய போதும், கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டமையினாலேயே இந்த போட்டியில் தோல்வியடைந்தது. தென் கொரியா அணி வெற்றி பெற்றால் உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியாது என்ற நிலையில் சம புள்ளிகள், சம கோல் வித்தியாசங்களை கொண்டிருந்த போதும் தென் கொரியா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உருகுவே அணியினை தென் கொரியா அணி வெற்றி பெற்றமையினால் அவர்கள் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளனர்.
போர்த்துக்கல் அணி சார்பாக ரிக்கார்டோ ஹேர்ட்டா ஐந்தாவது நிமிடத்தில் கோலை அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார். போராடிய தென் கொரியா அணி சார்பாக 27 ஆவது நிமிடத்தில் கிம் ஜங்கோன் அடித்த கோல் மூலமாக தென் கொரியா அணி சமநிலை பெற்றது. ரொனால்டோ 60 நிமிடங்கள் வரை விளையாடியும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை. 90 ஆவது நிமிடத்தில் சீ சான் அடித்த கோல் மூலம் தென் கொரியா அணி வெற்றி பெற்றது.
உருகுவே, மற்றும் கானா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணிக்கே அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில் உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. ஆனால் தென் கொரியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் என்ற நிலையில் இன்று அதுவே நடைபெற்றது.
கானா அணிக்கு 21 ஆவது நிமிடத்தில் கோலடிக்கும் வாய்ப்பு பனால்டி மூலம் கிடைத்தும் அதனை தவறவிட்டனர். அதன் பின்னர் உருகுவே அணிக்கு 26 மற்றும் 32 ஆவது நிமிடத்தில் ஜியோர்ஜின் டி அரஸ்கேட்டா அடித்த இரட்டை கோல்கள் மூலமாக உருகுவே அணி முன்னிலை பெற்றது. போட்டி 2-0 என்
வெற்றி பெற்றது.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | போர்த்துக்கல் | 03 | 02 | 01 | 00 | 06 | 02 | 06 | 04 |
2 | தென் கொரியா | 03 | 01 | 01 | 01 | 04 | 00 | 04 | 04 |
3 | உருகுவே | 03 | 01 | 01 | 01 | 04 | 00 | 02 | 02 |
4 | கானா | 03 | 01 | 0 | 00 | 03 | -02 | 05 | 07 |