இளையதளபதி விஜயுடன் இணையும் மஹேஷ்பாபுவின் மகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் தளபதி 66 திரைப்படமானது தெலுங்கு தயாரிப்பாளரான ராஜின் தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் ஒரு தந்தை மகள் உறவை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாகவும், இத்திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக தெலுங்கு சுப்பர்ஸ்டார் மஹேஷ்பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒன்பது வயதான மஹேஷ்பாபுவின் மகளான சிதாரா தற்போது யுடியுப் சனலினை நடாத்தி வருவதோடு, ஃபுரொஷன்-2 திரைப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில்; எல்சா கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்துள்ளார்.

மேலும், மஹேஷ்பாபு தனது மகள் ஆங்கிலத் திரைப்படங்களிலேயே நடிக்க விரும்புவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இளையதளபதி விஜயுடன் இணையும் மஹேஷ்பாபுவின் மகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version