மெஸ்ஸியின் முதல் கோல். ஆர்ஜன்டீனா காலிறுதியில்.

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முன்னோடி காலிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியினை பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஆர்ஜன்டீனா அணி 2-1 என வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா அணி கடுமையான தடுத்தாடும் பாணியில் விளையாடியது. ஆனாலும் ஆர்ஜன்டீனாவின் கோல்களை தடுக்க முடியவில்லை.

இன்று தனது ஆயிரமாவது போட்டியில் விளையாடிய லியனோல் மெஸ்ஸி தனது பாணியில் முதல் கோலை 35 ஆவது நிமிடத்தில் அடித்தார். உலக கிண்ண நொக் அவுட் போட்டியில் மெஸ்ஸி அடித்த முதலாவது கோல் இதுவாகும். 789 ஆவது கோலாக இது பதிவாகியுள்ளது. உலக கிண்ண தொடர்களில் ஆர்ஜன்டீனா அணி சார்பாக கூடுதல் கோல்கள் என்ற சாதனையை கொண்டுள்ள கப்ரால் பட்டிஸ்டுட்டாவின் சாதனையினை மெஸ்ஸி சமன் செய்தார்.

இரண்டாவது கோல் ஜுவன் அல்வரெஷினால் 57 ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. இது ஒரு சிறந்த கோலாகாக அமைந்தது. பந்தை துரத்தி பறித்து கோல் காப்பளிரிடம் இரண்டாம் தடவை பறித்து அடிக்கப்பட்து. அவுஸ்திரேலியா பின் வரிசை வீரர் மற்றும் கோல் காப்பாளர் ஆகியோரின் தவறினால் இந்த கோல் பெறப்பட்டது.

இந்தப் போட்டி ஆர்ஜன்டீனா சார்பாக ஒரு பக்க போட்டியா சென்ற வேளையில் 77 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பாக க்ரெய்க் குட்வின் பெற்ற கோல் மூலமாக போட்டி விறு விறுப்பாக மாறியது.

கடந்த முறை இரண்டாம் சுற்றோடு வெளியேறிய ஆர்ஜன்டீனா அணி பத்தாவது தடவையாக காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. உலக கிண்ண தொடரில் ஐம்பதாவது வெற்றியாக ஆர்ஜன்டீனா அணிக்கு இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

ஆர்ஜன்டீனா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கட்டர் நேரப்படி ஒன்பதாம் திகதி இரவு 10 மணிக்கு, இலங்கை நேரப்படி 10 ஆம் திகதி அதிகாலை 12.30 இற்கு நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version