2022 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் மிகவும் விறு விறுப்பான போட்டி ஸ்பெய்ன், மொரோக்கோ அணிகளுக்கிடையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மொரோக்கோ அணி காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. மொரோக்கோ அணி முதற் தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
பலமான ஸ்பெய்ன் அணிக்கு ஆறாவது உலக கிண்ணத்தில் விளையாடும் மொரோக்கோ அணி மிகப்பெரிய சவாலை வழங்கியது.
போட்டி ஆர்மபித்தது முதல் இரு அணிகளும் கோல்கள் அடிக்க முயற்சித்தனர். ஆனாலும் இரு அணிகளும் 120 நிமிடங்களில் கோல்களை பெற முடியாமல் போனது.
முடிவை தீர்மானிக்க டை பிரேக்கர் எனப்படும் பனால்டி உதைகள் வழங்கப்பட்டன. இதில் மொரோக்கோ அணி 3 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
வேகமான இரு அணிகளும் முன் வரிசை, பின் வரிசை என கடுமையாக போராடிய போட்டியாக இது அமைந்தது.
பனால்டி உதையில், ஸ்பெய்ன் அணியின் முதல் மூன்று கோல் வாய்ப்புக்களையும் மொரோக்கோ அணியின் கோல் காப்பாளர் தடுத்தார். ஸ்பெய்ன் அணியின் தலைவரது கோல் வாய்ப்பும் உள்ளடக்கம். மொரோக்கோ அணியின் மூன்றாவது உதையினை ஸ்பெய்ன் கோல் காப்பாளர் தடுத்தார்.