யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டுவருவோர் கைது!

ஹட்டன் வீதியூடாக சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஷேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையுடன், ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சுற்றிவளைப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் பிரிவின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு பக்தர்கள் வரும் வாகனங்கள் மற்றும் பஸ்களில் பயணிக்கும் பக்தர்கள் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின்போது சிகரட்களை வைத்திருந்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹட்டன் புகையிரத நிலையத்திலும் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.விஜித அல்விஸின் மேற்பார்வையில் இந்த யாத்திரை காலம் முயும்வரை குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version