விமல் – பல்லேகல மைதானத்திலிருந்து
ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செயதது.
முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டி ஆரம்பித்தது முதல் யாழ் அணி தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. இருப்பினும் அனைவரும் ஓட்டங்களை பெற்றதன் காரணமாக போராடக்கூடிய பலமான நிலை ஒன்று பெறப்பட்டுள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோ நல்ல ஆரம்பத்தை வழங்கினார். டுனித் வெல்லாளகே பின் மத்தியவரிசையில் சிறப்பாக துடுப்பாடினர். அவர் துடுப்பாடும் விதம் இலங்கை அணியின் 20-20 போட்டிகளுக்குள்ளும் அவரை இணைத்து கொள்ள வேண்டும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க வழமை போன்று சிறப்பாக பந்துவீசினார். பேபியன் அலனுடைய பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. மற்றையவர்கள் குறிப்பிட்டு கூறுமளவுக்கு சிறப்பாக பந்துவீசியதாக கூற முடியாது. இசுரு உதான 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | Bowled | பேபியன் அலன் | 16 | 13 | 3 | 0 |
| அவிஷ்க பெர்னாண்டோ | பிடி – சகூர் கான் | வனிந்து ஹஸரங்க | 31 | 26 | 4 | 0 |
| தனஞ்சய டி சில்வா | L.B.W | வனிந்து ஹஸரங்க | 10 | 14 | 1 | 0 |
| சதீர சமரவிக்ரம | Bowled | பேபியன் அலன் | 14 | 12 | 2 | 0 |
| சொஹைப் மலிக் | பிடி – சாமிக்க கருணாரட்டன | இசுரு உதான | 28 | 24 | 2 | 0 |
| டுனித் வெல்லாளகே | பிடி – சாமிக்க கருணாரட்டன | சகூர் கான் | 20 | 18 | 2 | 1 |
| திசர பெரேரா | 08 | 06 | 1 | 0 | ||
| ஜேம்ஸ் புல்லர் | பிடி – அஷேன் பண்டாரா | இசுரு உதான | 04 | 03 | 1 | 0 |
| விஜயகாந்த் விஜயஸ்காந் | 04 | 04 | 0 | 0 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 15.4 | விக்கெட் 01 | மொத்தம் | 147 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| சகூர் கான் | 04 | 00 | 28 | 01 |
| கார்லோஸ் ப்ராத்வைட் | 02 | 00 | 19 | 00 |
| இசுரு உதான | 04 | 00 | 32 | 02 |
| பேபியன் அலன் | 02 | 00 | 12 | 00 |
| வனிந்து ஹஸரங்க | 04 | 00 | 26 | 02 |
| கமிண்டு மென்டிஸ் | 02 | 00 | 14 | 00 |
அணி விபரம்
கடந்த கண்டி அணியின் போட்டியில் காயமடைந்து நான்கு பற்கள் உடைந்த சாமிக்க கருணாரட்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கண்டி அணி வெறி மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை.
ஜப்னா கிங்ஸ் மாற்றங்களின்றி விளையாடுகிறது.
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், ஷமான் கான்
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பேபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்
