காலி க்ளாடியேற்றஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பாடிய காலி க்ளாடியேற்றஸ் அணி சிறப்பான ஆரம்ப துடுப்பாட்டம் மூலம் பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது.
20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குஷல் மென்டிஸ், தனுக்க டபாரே ஆகியோர் 75 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். ஆரம்ப விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதும் காலி அணியின் ஓட்ட வேகம் குறைவடைந்தது. நவோட் பரனவித்தாரன, ஜெப்ரி வண்டர்சை ஆகியோர் விக்கெட்களை தகர்த்து ஓட்டங்களை கட்டுப்படுத்தினர்.
மத்திய வரிசையில் லஹிரு உதான, நுவனிது பெர்னாண்டோ ஆகியோரது இணைப்பாட்டம் வீழ்ந்த ஓட்ட வேகத்தை உயர்த்த உதவியது.
பெறப்பட்டுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கையானது கொழும்பு ஸ்டார்ஸ் அணியினால் துரத்த முடியுமென்றாலும் இலகுவாக பெற முடியாது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| தனுக்க டபாரே | பிடி – ஜெப்ரி வண்டர்சை | ஜெப்ரி வண்டர்சை | 36 | 27 | 8 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி – நிரோஷன் டிக்வெல்ல | ரவி போபரா | 39 | 27 | 5 | 2 |
| லஹிரு உதான | 45 | 35 | 5 | 1 | ||
| அஸாம் கான் | பிடி – சுரங்க லக்மால் | நவோட் பரணவித்தாரன | 08 | 13 | 1 | 0 |
| இப்திகார் அஹமட் | Boweld | ஜெப்ரி வண்டர்சை | 00 | 02 | 0 | 0 |
| நுவனிது பெர்னாண்டோ | பிடி – ஜெப்ரி வண்டர்சை | நவீன் உல் ஹக் | 29 | 16 | 3 | 2 |
| இமாட் வசீம் | பிடி – கரீம் ஜனட் | டொமினிக் ட்ரேக்ஸ் | 06 | 03 | 1 | 0 |
| வஹாப் ரியாஸ் | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 174 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| அஞ்சலோ மத்தியூஸ் | 01 | 00 | 08 | 00 |
| சுரங்க லக்மால் | 02 | 00 | 21 | 00 |
| நவீன் உல் ஹக் | 04 | 00 | 41 | 01 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | 04 | 00 | 32 | 01 |
| சரித் அசலங்க | 01 | 00 | 07 | 00 |
| ஜெப்ரி வண்டர்சை | 04 | 00 | 31 | 02 |
| ரவி போபரா | 01 | 00 | 04 | 01 |
| நவோட் பரணவித்தாரன | 04 | 00 | 28 | 01 |
