விஜயஸ்காந்துக்கு உபாதை. யாழ், தம்புள்ள போட்டி ஆரம்பம்.

ஜப்னா கிங்ஸ் மற்றும், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி ஆரம்பித்ததுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

யாழ் அணி இன்று தமது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. தம்புள்ள அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து ஐந்தாமிடத்தில் காணப்படுகிறது.

அணி விபரம்

யாழ் அணி வீரர் விஜயகாந்த் விஜயஸ்காந் முதுகுப்புற உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாளைய போட்டியில் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், டில்ஷான் மதுசங்க, பினுற பெர்னாண்டோ

அணி விபரம்

அணி விபரம்
தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரொம் அப்பெல், ரவிந்து பெர்னாண்டோ, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, தரிந்து ரட்நாயக்க, ப்ரமோட் மதுஷான், டுஸான் ஹேமந்த

விஜயஸ்காந்துக்கு உபாதை. யாழ், தம்புள்ள போட்டி ஆரம்பம்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version