சிறுநீரக மாற்று சர்ச்சை – தடையை நீக்க ரிட் மனு

கொழும்பு வெஸ்டேர்ன் வைத்தியசாலையில் சிறு நீராக மாற்று சத்திர சிகிச்சைகளில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த வைத்தியசாலையில் சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான இடைக்கால தடையினை நீக்க கோரி வைத்தியசாலை தரப்பினர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வைத்தியசாலையில் முறைகேடான வகையில் சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக சுகாதர அமைச்சு குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தடை விதித்துள்ளது.

சுகாதர அமைச்சின் பணிப்பாளர் நாயகம் இடைக்கால தடையினை நீக்க வேண்டுமெனவும், சிறுநீரக சத்திர சிகிசிச்சை செய்ய அனுமதி வழங்குமாறும் கோரி வெஸ்டேர்ன் வைத்தியசாலையின் நிறுவனரும், தலைவருமான வைத்தியர் ரிஷ்வி ஷெரிப் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த ரிட் மனு விசாரணைக்காக எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1985 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிறுநீராக மாற்று சிகிச்சையினை செய்தவர் தான் எனவும், இதுவரையில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுநீரக மாற்று சிகிச்சையினை செய்துள்ளதாகவும் வெஸ்டேர்ன் வைத்தியசாலையின் நிறுவனர் வைத்தியர் ரிஷ்வி ஷெரிப் கூறியுள்ளார்.

வெஸ்டேர்ன் வைத்தியசாலையில் செய்யப்பட்ட சகல சிறுநீரக மாற்று சிகைச்சைகளும் சுகாதர அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார். நடைபெற்றுள்ள சகல சம்பவங்களும் திட்டமிடப்பட்ட ஊடக செயற்பாடு என கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தான் பல வழிகளிலும் குறி வைக்கப்பட்டதாகவும், மருத்துவமனையினை பல வழிகளிலும் தவறாக வெளிக்காட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டதாகவும் வைத்தியர் ரிஷ்வி கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் ஷஹாதா பாரி, புலஸ்தி ரணசிங்க, ஹபீல் பாரிஸ், ரித்மி பெனராகம ஆகியோர் வழக்கறிஞர் நீலகண்டனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னிலையான அதேவேளை, வழக்கறிஞர் நீலகண்டன், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோரும் மனுதாரர் சார்பாக வைத்தியசாலையில் முன்னிலையாகியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version