கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் சாரதியான 26 வயதுடைய மொஹமட் ரைசுல் ரிஸாக் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான பிணை நிபந்தனைகள் மற்றும் தலா 500,000. ருபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் மூன்று குழந்தைகளுக்கு 1.5 மில்லியன் ருபாய் பணத்தொகை இவரால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி சனிக்கிழமை, இரவு விடுதிக்கு சென்று திரும்பும்போது, சொகுசு காரில் பயணித்த மூவரால் கொள்ளுப்பிட்டியில் சம்பவித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் பலியாயானார். சம்பவ இடத்திலிருந்து காரின் சாரதி தப்பிச்சென்றிந்த நிலையில், துபாய் சென்று திரும்பும் வேளையில் கைது செய்யப்பட்டு, நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.