கண்டி பல்கொன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் கொழும்பு, R.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கண்டி அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
107 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கண்டி அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி மிக மோசமாக தடுமாறி 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆரம்பம் முதலே தொடர்ந்து விக்கெட்களை இழந்த கொழும்பு அணி, ஒஷேன் தோமஸின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்களை இழந்தது. ஆரம்ப விக்கெட்களை இசுரு உதான, சாமிக்க கருணாரட்ன ஆகியர் கைப்பற்றினார்கள். சாமிக்க கருணாரட்ன இறுதி நேரத்திலும் இரு விக்கெட்களை கைப்பற்றினார்.
தடுமாறிய கொழும்பு அணிக்கு எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம் ஓரளவு கைகொடுத்தது. சுரங்க லக்மால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் ஓட்ட எண்ணிக்கையினை சிறிதளவு உயர்த்தினார்கள். நிதானமாக துடுப்பாடி வேகத்தை அதிகரிக்க முனைய சுரங்க லக்மாலின் விக்கெட்டினை மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்ட இசுரு உதான கைப்பற்றினார்.
அஞ்சலோ மத்தியூஸ் இறுதி நேரத்தில் தனித்து நின்று அதிரடி நிகழ்த்தினார். மத்தியூஸின் துடுப்பாட்டம் மூலம் கொழும்பு அணி ஓரளவு மீண்டது.
பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி முதல் விக்கெட்டினை வேகமாக இழந்த போதும், கமிண்டு மென்டிஸ், அன்றே பிளட்சர் ஆகியோர் சத இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றியினை பெற்றுக்கொணடனர். கமிண்டு மென்டிஸ் அரைசதத்தை தனதாக்கி கொண்டார்.
இந்தப் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும் என்ற நிலையில் இந்த மோசமான துடுப்பாட்டம் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவுள்ளது.
கொழும்பு, காலி, தம்புள்ள அணிகளுக்கான வாய்ப்புகள் இன்னமும் தொடர்கின்றன.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | Bowled | இசுரு உதான | 00 | 02 | 0 | 0 |
| டினேஷ் சந்திமால் | பிடி- நஜிபுல்லா ஷர்டான் | சாமிக்க கருணாரட்டன | 20 | 17 | 1 | 1 |
| சரித் அசலங்க | பிடி | பேபியன் அலன் | 12 | 11 | 2 | 0 |
| நவோட் பரணவித்தாரன | பிடி- நஜிபுல்லா ஷர்டான் | சாமிக்க கருணாரட்டன | 04 | 04 | 1 | 0 |
| ரவி போபரா | பிடி – மினோட் பானுக | ஒஷேன் தோமஸ் | 01 | 02 | 0 | 0 |
| அஞ்சலோ மத்தியூஸ் | சாமிக்க கருணாரட்டன | 41 | 37 | 4 | 1 | |
| பென்னி ஹோவல் | பிடி- சமிந்து விஜயசிங்க | ஒஷேன் தோமஸ் | 00 | 01 | 0 | 0 |
| கரீம் ஜனட் | பிடி- அன்றே பிளட்சர் | ஒஷேன் தோமஸ் | 01 | 03 | 0 | 0 |
| சுரங்க லக்மால் | பிடி- அன்றே பிளட்சர் | இசுரு உதான | 15 | 29 | 1 | 0 |
| ஜெப்ரி வண்டர்ஸி | Bowled | சாமிக்க கருணாரட்டன | 02 | 04 | 0 | 0 |
| கஸூன் ரஜித | 00 | 02 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 10 | மொத்தம் | 106 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இசுரு உதான | 04 | 00 | 37 | 02 |
| சாமிக்க கருணாரட்டன | 3.1 | 00 | 11 | 04 |
| ஒஷேன் தோமஸ் | 04 | 00 | 20 | 03 |
| பேபியன் அலன் | 04 | 00 | 20 | 01 |
| வனிந்து ஹஸரங்க | 04 | 00 | 12 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| மினோட் பானுக | பிடி – வொக்கார் சலாம்கெஹலி | 06 | 07 | 1 | 0 | |
| அன்றே பிளட்சர் | 44 | 41 | 4 | 2 | ||
| கமிண்டு மென்டிஸ் | 51 | 48 | 5 | 0 | ||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 16 | விக்கெட் 01 | மொத்தம் | 108 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஹூன் ரஜித | 03 | 00 | 19 | 00 |
| சுரங்க லக்மால் | 02 | 00 | 19 | 01 |
| ஜெப்ரி வண்டர்ஸி | 04 | 00 | 22 | 00 |
| பென்னி ஹோவல் | 03 | 00 | 16 | 00 |
| நவோட் பரணவித்தாரன | 01 | 00 | 07 | 00 |
| கரீம் ஜனட் | 02 | 00 | 13 | 00 |
| ரவி போபரா | 01 | 00 | 07 | 00 |
