உலக கிண்ணம் – 90 நிமிடங்கள் சமநிலையில்

FIFA உலக கிண்ண தொடரின் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி 2-2 என சமநிலையில் ஒதுக்கப்பட்ட நேரம் நிறைவடைந்துள்ளது.

23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு கிடைத்த பனால்டியினை கோலாக மாற்றினார் லியனோல் மெஸ்ஸி. 36 ஆவது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா அடித்த கோலின் மூலமாக ஆர்ஜன்டீனா அணி பலமான நிலைக்கு மாறியது. 70 நிமிடங்கள் வரை பிரான்ஸ் அணி கோலை நோக்கி எந்த பந்தையும் செலுத்தவில்லை. அந்தளவுக்கு ஆர்ஜன்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது.

80 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்டியினை மாப்பே கோலாக மாற்றினர். 1 நிமிட இடைவேளையில் மிக அபாரமான கோல் ஒன்றின் மூலம் மாப்பே போட்டியினை சமன் செய்தார். அதன் பின்னர் பிரான்ஸ் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தியது. ஆர்ஜன்டீனா அணி இறுதி நேரத்தில் தடுமாறி போனது.

போட்டி நிறைவடைய சில செக்கன்கள் மீதமிருக்க மெஸ்ஸியின் மிக சிறந்த கோல் முயற்சியினை தடுத்தார் பிரான்ஸ் கோல் காப்பாளர் லொரிஸ்.

சிறப்பாக விளையாடிய ஆர்ஜன்டீனா அணி விட்ட தவறுகள் அவர்களிடமிருந்த வெற்றி வாய்ப்பை பறித்து சென்றுள்ளது. பனால்டி வாய்ப்பை ஒட்டமேன்டி தேவையற்ற ரீதியில் ஏற்படுத்தியது பனால்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது கோலை மாப்பே ஏற்படுத்திய பந்து மெஸ்ஸிக்கு பௌல் அடித்து எடுக்கப்பட்ட போதும் மத்தியஸ்தர் பௌல் வழங்கவில்லை.

மேலதிக நேரத்தில் போட்டி தொடர்கிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version