கண்டி அணிக்கு முதிலிடம் உறுதியானது. வெளியேறும் அபாய நிலையில் தம்புள்ள

கண்டி பல்கொன்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டியில் கண்டி அணி தம்புள்ள அணியினை 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்று முதலிட அணியாக முதல் சுற்றை நிறைவு செய்துள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் கண்டி அணி வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றுள்ளது.

தம்புள்ள ஓரா அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தமையினால் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரிவாவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. தம்புள்ள அணி தோல்வியடைந்தமையினால் கொழும்பு அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

இவ்வாறன நிலையில் காலி மற்றும் தம்புள்ள அணிகளுக்கிடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

ஆரம்பம் முதலே சராசரி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கண்டி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக பிரகாசிக்க தவற வெற்றி இலக்கை நோக்கி நகர முடியவில்லை. சிகண்டர் ரஷா மட்டுமே ஓரளவு சிறப்பாக துடுப்பாடினார். இணைப்பாட்டங்கள் அவருக்கு அமையாத காரணத்தினால் தோல்வியினை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version