வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் தூசித் துகள்கள் மற்றும் அண்மைய காலநிலை நிலைமைகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நிலவும் புவியியல் நிலை காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“கண்டியில் காற்றின் தரம் சாதாரணமாக ஆரோக்கியமான அளவில் இல்லை, ஆனால் அப்பகுதியின் அதிக மாசுபாடு காரணமாக தற்போது அது மிகவும் மோசமடைந்துள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்நிலை மக்களின் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.