காலி அணியின் ஓட்ட எண்ணைக்கையினை கட்டுப்படுத்தியது கொழும்பு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கொழும்பு ஸ்டார்ஸ், கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான வெளியேற்றும் போட்டி கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய காலி அணி தடுமாறி 18 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்பம் முதலே ஓட்டங்களை பெற தடுமாறி வந்த காலி அணி விக்கெட்களையும் இழக்க மோசமாக தடுமாறியது. சஹான் ஆராச்சிகே மாத்திரம் மத்திய வரிசையில் அரைச்சதம் அடித்து ஓரளவு அணியை காப்பாற்றி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் மொஹமட் நபி இறுக்கமாக பந்துவீசினார். ஓட்டங்களை அதிமாக வழங்காமல் விக்கெட்களையும் கைப்பற்றினார். கஸூன் ரஜித்த சிறப்பாக ஆரம்பித்து நிறைவு செய்தும் கொடுத்தார்.

கொழும்பு அணி இந்த இலக்கினை இலகுவாக பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணபடுகின்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி கண்டி பல்கொன்ஸ் அணியுடன் இரண்டாம் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.

மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகவே ஆரம்பித்தது. அதன் காரணமாக 18 ஓவர்களடங்கிய போட்டியாக இந்தப் போட்டி மாற்றபப்ட்டது. கண்டி, யாழ் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு டக் வேர்த் லூயிஸ் முறைப்படியே யாழ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

அணி விபரம்

கொழும்பு ஸ்டார்ஸ்

அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், நிஷான் மதுசங்க, சரித் அசலங்க, ரவி போபரா, கரீம் ஜனட், ரவி போபரா, மொஹமட் நபி, டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், ஜப்ரி வண்டர்சி, பென்னி ஹோவெல், கஸூன் ரஜித்த

கோல் கிளாடியேட்டர்ஸ்

குஷல் மென்டிஸ், ஆஷாட் ஷபிக், நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே லஹிரு உதான, இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், லக்ஷன் சன்டகன், அஸாம் கான்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஆஷாட் ஷபிக்பிடி – அஞ்சலோ மத்தியூஸ்கஸூன் ரஜித்த040700
குசல் மென்டிஸ்பிடி – நிஷான் மதுசங்கமொஹமட் நபி041400
லஹிரு உதாரபிடி – சுரங்க லக்மால்டொமினிக் ட்ரேக்ஸ்061300
சஹான் ஆராச்சிகேபிடி – சரித் அசலங்கபென்னி ஹோவெல்533133
நுவனிது பெர்னாண்டோபிடி – சரித் அசலங்கமொஹமட் நபி081000
இப்திகார் அஹமட்,பிடி – மொஹமட் நபிசுரங்க லக்மால்051000
இமாட் வசீம்பிடி – சரித் அசலங்கபென்னி ஹோவெல்171520
வஹாப் ரியாஸ்Bowledபென்னி ஹோவெல்020400
லக்ஷன் சன்டகன்Bowledகஸூன் ரஜித்த010300
நுவான் பிரதீப்  000100
நுவான் துஷார  020100
உதிரிகள்  05   
ஓவர்  18விக்கெட்  09மொத்தம்108   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித்த04010902
சுரங்க லக்மால்04002701
மொஹமட் நபி04002002
டொமினிக் ட்ரேக்ஸ்03002101
ஜப்ரி வண்டர்சி01001300
பென்னி ஹோவெல்01000802

காலி அணியின் ஓட்ட எண்ணைக்கையினை கட்டுப்படுத்தியது கொழும்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version